நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (27.04.2025) காலை-09 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
அபிஷேக வழிபாடுகள், திருமுறை, நற்சிந்தனை ஓதுதல் வழிபாடுகளைத் தொடர்ந்து 'பழமையைப் பேணல்' எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவர் கலாநிதி. பொன்னுத்துரை சந்திரசேகரம் கலந்து கொண்டு உரை ஆற்றுவார்.