தந்தை செல்வாவின் 48 ஆவது ஆண்டு நினைவுநாள் அஞ்சலி

யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 48 ஆவது ஆண்டு நினைவுநாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நிகழ்வு  இன்று சனிக்கிழமை (26.04.2025) காலை-09 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலைப் பேராசிரியர்.கலாநிதி.றமீஸ் அப்துல்லா கலந்து கொண்டு "ஈழத்துத் தமிழ் பேசும் மக்கள் அரசியலின் தன்னிகரற்ற தலைவன் தந்தை செல்வா" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.