வெகுசிறப்பாக இடம்பெற்ற தெல்லிப்பழை காசிவிநாயகர் தேர்த் திருவிழா

தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (22.04.2025) வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளிக் காலை-09 மணியளவில் சித்திரத் தேரில் ஆரோகணித்தார். திருப்பல்லாண்டு ஓதப்பட்டுச் சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-09.30 மணியளவில் சித்திரத்தேர்ப் பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான அடியவர்கள் சித்திரத் தேர்ப் பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.