12,000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு!


தற்போது போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான போட்டிப் பரீட்சை அடுத்த வாரம் நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.