வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (08.01.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை பொன்னாலை- பருத்தித்துறை வீதியில் இயங்கி வரும் மேற்படி வைத்தியசாலையின் சிகிச்சை மண்டபத்தில் நடைபெறும்.
குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)