குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் வருடாந்த திருவாசகம் முற்றோதல்

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நாளை சனிக்கிழமை(14.01.2023) காலை-06 மணிக்கு விசேட பூசையுடன் ஆரம்பமாகி இடம்பெறும்.

திருவாசகம் முற்றோதல் நிறைவுற்றதைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இதேவேளை, மேற்படி திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சிவபூமி ஞான ஆச்சிரமத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)