இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்


2030 ஆம் ஆண்டளவில் இராணுவ உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இராணுவப் படைக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவைக் குறைத்து அதனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 2,00,783 பேர் கொண்ட இராணுவப் படையினர் காணப்படும் நிலையில் அடுத்த வருடத்திலிருந்து அவர்களின் எண்ணிக்கையை 1,35,000 வரை குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.