கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திங்களன்று பொங்கல் விழா


தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டுக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பொங்கல் விழா  நாளை மறுதினம் திங்கட்கிழமை (16.01.2023) காலை 8.30 மணியளவில் மேற்படி கலாசாலையின் முற்றத்தில் கலாசாலை நுண்கலை மன்ற ஏற்பாட்டில் இடம்பெற உள்ளது.

கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந் தலைவருமான பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியை.மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்வர். 

பொங்கல் செயற்பாடும் அதற்கான விளக்கங்களும் எனும் தலைப்பில் பேராசிரியை. மனோன்மணி சண்முகதாஸ் செயன்முறை ரீதியாக ஆசிரிய மாணவர்களுக்கு விளக்க உரை வழங்குவார். 

இதேவேளை, கலாசாலையில் அமைந்துள்ள யோக லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் தினமான நாளை ஞாயிற்றுக்கிழமை (15.01.2023) முற்பகல்-11 மணியளவில் பொங்கல் வழிபாடு நடைபெறும் எனவும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் அறிவித்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)