சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் கொரோனாக் கட்டுப்பாடுகள்


நாட்டிற்கு வருகை தரும் அனைத்துச் சுற்றுலாப் பயணிகளுக்கும் மீண்டும் கொரோனாக்   கட்டுப்பாடுகள் இன்று சனிக்கிழமை (14.01.2023) முதல் விதிக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளிற்கு அமைய  நாட்டிற்கு வருகை தரும் அனைத்துச் சுற்றுலாப் பயணிகளும் டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகளைத் தம்வசம் வைத்திருப்பது கட்டாயமாகும்.

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை இல்லாதோர் பிசிஆர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். 

நாட்டிற்குள் கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.