மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் நாளை தைமாத சங்கராந்தி பொங்கல் பூசை வழிபாடு


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.மாவிட்டபுரம் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(15.01.2023) தைமாத சங்கராந்தி பொங்கல் பூசை வழிபாடு சிறப்பாக இடம்பெற உள்ளது.

நாளை காலை 06:00 மணிக்குத் திருப்பள்ளியெழுச்சி, காலை 06:30 மணிக்கு திருவனந்தல் பூசை, காலை 07:30 மணிக்கு 108 சங்காபிஷேகம், காலை 09:00 மணிக்கு காலைச்சந்திப் பூசை, காலை-09:30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை தொடர்ந்து திருவிழா, நண்பகல் 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூசை என்பன இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)