சாவகச்சேரியில் நாளை இரத்ததான முகாம்


அமரர்.நேசதுரை நிலக்சனின் 26 ஆவது பிறந்தநாள் நினைவாக கண்டு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(14.01.2023)காலை-08.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குருதிக் கொடை வழங்க ஆர்வம் உள்ளவர்கள் 0754082122 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)