சுன்னாகத்தில் நாளை பட்டமளிப்பு வைபவம்


இந்து ஆகம நவீன கலை, கலாச்சார நிறுவன வேதாகம குருகுலப் பாடசாலை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் நாளை சனிக்கிழமை(14.01.2023) காலை-08 மணியளவில் சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி நிறுவனத் தலைவர் முத்தமிழ்க் குருமணி நா.சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் ஆசி உரை ஆற்றுவார்.    

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி.இராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவர் கலாநிதி. ம.பாலகைலாசநாதசர்மா, பிரம்மஸ்ரீ ப.சிவானந்தசர்மா, சிவஸ்ரீ தியாக.மயூரகிரிக் குருக்கள், சிவஸ்ரீ.சோ.பிரசன்னக் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் நிகழ்த்துவர்.  

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)