நிறைவேற்றப்பட்டது தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம்!


தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் 61 மேலதிக வாக்குகளால் இன்று வியாழக்கிழமை (19.01.2023) மாலை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதேவேளை, தேர்தலுக்கு இது பொருந்தாது எனக் குறித்த சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சி முன்வைத்த விடயத்தை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.