குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை அபிராமிப்பட்டர் உற்சவம்


யாழ். குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் தை அமாவாசை தினத்தை ஒட்டிய அபிராமிப்பட்டர் உற்சவம் நாளை சனிக்கிழமை (21.01.2023) மாலை சிறப்புற இடம்பெற உள்ளது.   

நாளை மாலை-05.30 மணியளவில் விசேட அபிஷேக பூசைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து    அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி ஓதும் நிகழ்வும் இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)