யாழ்.கொய்யாத் தோட்டத்தில் நாளை இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 5 ஆவது சாரணர் குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(21.01.2023) காலை-10 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை யாழ்.கொய்யாத் தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய மண்டபத்தில் நடைபெறும்.

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)