சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லை ஸ்டார் இசைக் கலாலயத்திற்கு நிதி உதவி


முல்லைத்தீவு உடையார்கட்டு முல்லை ஸ்டார் இசைக் கலாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக  உடையார்கட்டில் வசிக்கும் முதியோர்களைக் கௌரவிப்பதற்காக 40,000 ரூபா நிதி உதவி இன்று  சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.    

சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று வெள்ளிக்கிழமை(20.01.2023) காலை இடம்பெற்ற வாராந்த நிகழ்வில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் குறித்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.  


வாராந்தச் சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவரும், ஆசிரியருமான சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)