இன்றும், நாளையும் மின் துண்டிப்பு இல்லை!

இன்று திங்கட்கிழமையும்(30.01.2023), நாளை செவ்வாய்க்கிழமையும் (31.01.2023) மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நீரேந்து பகுதிகளில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதால் நீர்த் தேக்கங்களிலிருந்து மின்சார உற்பத்திக்குப் போதியளவு நீரை விடுக்க நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது.

எனவே, இன்றும், நாளையும் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.