பயங்கரவாத தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுதலையானார் வசந்த முதலிகே


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(31.01.2023) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக வசந்த முதலிகே இன்றையதினம்  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில்  நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, மேற்படி வழக்கிலிருந்து வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சில வழக்குகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.