புதன், வெள்ளிக்கிழமைகளில் குப்பிழான் கெளரி அம்பாள் ஆலயத்தில் அன்னதானம்

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை புதன்கிழமையும் (01.02.2023), எதிர்வரும் வெள்ளிக் கிழமையும்(03.02.2023) அன்னதானம் இடம்பெற உள்ளதாக மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் அறிவித்துள்ளார்.        

நாளை முற்பகல்-11 மணிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள், பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அன்னதானம் இடம்பெறும்.

இதேபோன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் முற்பகல்-11 மணிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள், பூசைகள் இடம்பெற்றுத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும்.    

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)