யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சனிக்கிழமை(18.02.2023) இரவு விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற உள்ளன.
இன்று மாலை-06 மணியளவில் விசேட அபிஷேகம் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தினுள் எழுந்தருளி உள்ள சிவலிங்கப் பெருமானுக்கு இரவு-09 மணி வரை
பால், தயிர் முதலான அபிஷேக திரவியங்களைக் கொண்டு வந்து அடியவர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபட முடியும்.
அதனைத் தொடர்ந்து வில்வ அர்ச்சனையும், லிங்கோற்பவ காலமான நள்ளிரவு-12 மணிக்கு லிங்கோற்பவ விசேட பூசையும் நடைபெறும் என மேற்படி ஆச்சிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)