ஏழாலையில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று விசேட நிகழ்வுகள்


மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர் சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(18.02.2023) மாலை-06.30 மணியளவில் ஏழாலைச் சிவன் என அழைக்கப்படும் ஏழாலை சொர்ணாம்பிகை சமேத அம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.

இதன்படி, ராவண் ரிதம்ஸ் இசைக் குழுவினரின் பக்திப் பாடல் இசைக் கச்சேரி, செ.கணேந்திரனின் நெறியாள்கையில் கருணாகர வில்லிசைக் குழு வழங்கும் சத்தியவான் சாவித்திரி வில்லிசைக் கச்சேரி என்பன நடைபெறும்.

மேற்படி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)