புலர்காலையின் வலி நூல் வெளியீடு நாளை


எழுத்தாளர் இயல்வாணன் எழுதிய புலர்காலையின் வலி சிறுகதைத் தொகுப்பின் அறிமுகவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(19.02.2023) மாலை-3.00 மணிக்கு கரவெட்டி இமையாணன் கலைமகள் முன்பள்ளி மண்டபத்தில் கலாநிதி சு.குணேஸ்வரன் தலைமையில் நடைபெற உள்ளது.  

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன், எழுத்தாளர் சித்தாந்தன் ஆகியோர் விமர்சன உரைகளை ஆற்றுவர்.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் இ.தமிழ்மாறன் நூலை வெளியிட்டு வைக்கத்  தென்மராட்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந.காண்டீபன் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வார்.