யாழ்ப்பாணம் சிவா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(19.2.2023) காலை-09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு அருகில் மேற்படி விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சிவா சனசமூக நிலையத்தில் நடைபெறும்.
மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்கள் 0778737409 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.