தரம்-3 இல் 90 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு இல்லை!

அரச பாடசாலைகளில் தரம்-3 இல் கல்வி கற்கும் 90 வீத மாணவர்களுக்கு எழுத்துக்கள் மற்றும் இலக்கங்கள் தொடர்பான அறிவு இல்லை எனக் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாப் பெருந் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டமையே இதற்குக் காரணம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுதுதல், அடிப்படைக் கணக்கு தொடர்பான அறிவு போன்றவற்றின் அடிப்படையில், கல்வி அமைச்சினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது..

இதற்கமைய, தரம்-3 இல் கல்வி பயிலும் 34 வீத மாணவர்களுக்கு மாத்திரமே எழுத்தறிவும், 7 வீத மாணவர்களுக்கு மாத்திரம் எண்கள் தொடர்பான அறிவும் காணப்படுகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.