தற்போதைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் உழைக்கும் மக்களின் தீப்பந்தப் போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை(17.03.2023) மாலை-06 மணியளவில் பருத்தித்துறை வீதி, புத்தூர்ச் சந்தியில் இடம்பெற உள்ளது.
66 வீத மின்கட்டண உயர்வைக் கைவிடு!, உணவு, எரிபொருள் விலைகளைக் குறை!, மக்களைப் பட்டினிக்குள் தள்ளாதே!, சூழ்ச்சிகளால் உள்ளுராட்சித் தேர்தலை நிறுத்தாதே!, வரிகளைச் சுமத்தி மக்களை உறிஞ்சாதே!, நாட்டின் வளங்களை வல்லரசுகளுக்குத் தாரை வார்க்காதே!, தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வேண்டும், அடக்கு முறைகளை ஏவி
மக்களை ஒடுக்காதே!, IMF நிபந்தனைகளால் நாட்டு வளங்களைத் தனியார் துறைகளுக்குத் தாரை வார்க்காதே! உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதேவேளை, குறித்த தீப்பந்தப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் அணி திரளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
(செ.ரவிசாந்)