இணுவிலில் நாளை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு

யாழ்.இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(17.03.2023) பிற்பகல்-01 மணியளவில் இணுவில் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு முற்றத்தில் கல்லூரி முதல்வர் இ.துரைசிங்கம் தலைமையில் இடம்பெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் நடராசா கஜேந்திரன் பிரதம விருந்தினராகவும், கனடாவைச் சேர்ந்த பழைய மாணவர்களான அருளானந்தம் குபேரானந்த உதயன், இரத்தினசிங்கம் பார்த்தீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரிச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.