கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்புஹாமி பியசேன இன்று வெள்ளிக்கிழமை (17.03.2023) காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்ன முகத்துவாரம் 40 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த மோட்டார்ச் சைக்கிளும் பாரவூர்தியும் மோதிய விபத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. 

விபத்தைத் தொடர்ந்து அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிங்களவரான பியசேன கடந்த- 2010 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவானார். பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.