உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக் கொடுப்பனவு அதிகரிப்பு

 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட உள்ளவர்களுக்கான நாளாந்தக் கொடுப்பனவை 2,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்கு அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன்  மூலம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனவே, தகுதி வாய்ந்தோர் www.doenets.lk எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச்  சமர்ப்பிக்க முடியும்.

இதேவேளை, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும்-8 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.