சுழிபுரத்தில் நாளை படைப்பாளுமை தாட்சாயணிக்கான வாழ்த்தரங்கு

கவிதை, சிறுகதை, நாவல் எழுத்தாளரும், இலங்கை சாகித்திய மண்டலம், வடக்கு மாகாண சபை, தமிழகப் பண்பாட்டு அமைப்புக்கள் போன்றவற்றில் பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான படைப்பாளுமை தாட்சாயணிக்கான (திருமதி.பிரேமினி பொன்னம்பலம்) வாழ்த்தரங்கு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(05.03.2023) காலை-09.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை சுழிபுரத்தில் அமைந்துள்ள கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக அரங்கத்தில் மேற்படி நூலகத்தின் நிறுவுனர் வள்ளியம்மை சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற உள்ளது.  

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.கந்தையா சிறீகணேசன், கே.ஏ.எஸ். சத்தியமனை நூலக நிர்வாகி கலாநிதி. ந.இரவீந்திரன், வலி.மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜெயந்தன், கவிஞர் அழ.பகீரதன், அரங்கா விஜயராஜ், மல்லிகா செல்வரத்தினம் ஆகியோர் வாழ்த்துரைகள் ஆற்றுவர். இறுதியாக விழா நாயகி தாட்சாயணி ஏற்புரையை நிகழ்த்துவார்.    

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.