பொருளாதார நலிவுற்ற முதியவரின் சிகிச்சைக்கு சந்நிதியான் ஆச்சிரமம் நிதி உதவி


சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்டு வரும் வாராந்த நிகழ்வுகள் வரிசையில் சிறப்பு நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை(03.03.2023) காலை  யாழ்.ஏழாலை ஶ்ரீமுருகன் வித்தியாலய  மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும்   இடம்பெற்றன.

நிகழ்வில் கண்பார்வை குறைந்த, பொருளாதார நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு  சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தின் சார்பில் சிகிச்சைகளுக்காக 25,000 ரூபா நிதி வழங்கி வைக்கப்பட்டது.

(செ.ரவிசாந்)