சாவகச்சேரியில் ஞாயிறன்று இரத்ததான முகாம்


தவக்காலத்தை முன்னிட்டுச் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(05.03.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை மேற்படி ஆலய முன்றலில் நடைபெற உள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க ஆர்வமுள்ளவர்கள் 0775761914  மற்றும் 0779859146 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.