வீரர்களின் போர் நாளை ஆரம்பம்

'வீரர்களின் போர்' என அழைக்கப்படும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான 21 ஆவது வீரர்களின் போர் துடுப்பாட்டப் போட்டி

நாளை வெள்ளிக்கிழமை (03.03.2023) காலை-08.30 மணியளவில் யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது.

நாளை மறுதினம் சனிக்கிழமையும்(04.03.2023) துடுப்பாட்டப் போட்டி தொடர்ந்தும் இடம்பெறும்.  

குறித்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன 

இதுவரை நடைபெற்ற 20 போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியானது 5 போட்டிகளிலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில் 11 போட்டிகள் சமநிலையிலும் நிறைவுற்றன.

இறுதியாக 2020 ஆம் ஆண்டு துடுப்பாட்டப் போட்டி இடம்பெற்றதுடன் கடந்த இரு வருடங்களுக்குமான போட்டிகள் கொரோனா இடர்நிலை போன்ற சூழ்நிலைகளால் இடம்பெறவில்லை

இறுதியாக இடம்பெற்ற போட்டி சமநிலையில் நிறைவுற்றதால் இவ் வருடம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியானது சொந்த மைதானத்தில் கிண்ணத்தைத் தக்க வைப்பதில் முனைப்புக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இரு பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட அனைவரையும் அமைதியான முறையில் வீரர்களின் போர் துடுப்பாட்டப் போட்டியைக் கண்டு களிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


(செ.ரவிசாந்)