தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் இன்று வியாழக்கிழமை(16.03.2023) முதல் எதிர்வரும்-14 நாட்களுக்குள் தமது கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணைக் குழுவின் அறிவிப்பினை மீறும் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.