பணிப் புறக்கணிப்பால் போக்குவரத்துச் சபைக்கு 90 லட்சம் ரூபா நட்டம்!

தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப் புறக்கணிப்புக் காரணமாக நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 90 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்புக் காரணமாக மக்கள் தங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே செல்லாமையே இந்த வருமான இழப்புக்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.