கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை முன்னிட்டுக் கலாசாலையின் உடலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு நாளை வியாழக்கிழமை(16.03.2023) பிற்பகல்-2 மணி முதல் மேற்படி கலாசாலை மைதானத்தில் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெற உள்ளது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், மேற்படி கலாசாலையின் முன்னாள் அதிபரும், பிரான்ஸ் அரசினால் செவாலியே விருது வழங்கிக்  கௌரவிக்கப்பட்டவருமான திருமதி.சிவயோகநாயகி இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர்.