தற்போதைய மருந்துத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனைக்கு ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி மருத்துவமனையில் குறித்த மருந்துகள் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் கொக்குவில் பொற்பதி கிராமத்தைச் சேர்ந்த ராஜி குடும்பத்தினரின் பத்து லட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நிதிப் பங்களிப்பில் கொக்குவில் பொற்பதி கிராம மக்கள் சார்பாக கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையத் தலைவர் கணேசலிங்கம் பிரசாந், கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையச் செயலாளர் க.ராகுலன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மேற்படி மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி திருமதி.ரதினி காந்தநேசனிடம் நேரடியாகக் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் மருத்துவர், மருத்துவமனையின் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வட்டுக்கோட்டைப் பிரதேச மருத்துவமனை நிர்வாகம் அண்மையில் விடுத்திருந்த பகிரங்க வேண்டுகோளுக்கு அமையவே மேற்படி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)