யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்...

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(23.03.2023) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.மட்டுவில் வீதி, புத்தூர், வீரவாணி, ஊறணி, அல்லைப்பிட்டி, அல்லைப்பிட்டி தேவாலயத்தடி, மண்கும்பான் நீர்ப்பாசன சபை, வெண்புரவிநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

(செ.ரவிசாந்)