சிவ சங்கமம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(11.03.2023) மாலை-04 மணி முதல் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள சைவமகா சபை-தமிழ்ச் சைவப் பேரவை தலைமைப் பணிமனையின் திருமூலர் குருகுலத்தில் இடம்பெற உள்ளது.
நந்திக் கொடி ஏற்றல் ஆரம்பமாகும் நிகழ்வில் தேவாரம், திருத்தொண்டர் புராணம், சிவத்தியானமும் திருவைந்தெழுத்து ஓதுதல், திருமந்திர சிந்தனை, புதிய சிவதொண்டர் மங்கையர் அறிமுகம், நிகழ்காலச் சவால்கள் செயற்பாடுகள் ஆராய்வு, கொடி இறக்கம், திருவாசகம், கந்தபுராண வாழ்த்து ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.