சண்டிலிப்பாயில் நாளை மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

அமரர்.சுரேந்திரன் சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக ஆலங்குளாய் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(11.03.2023) காலை-09 மணி முதல் சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறும்.

உயிர்காக்கும் இந்த உன்னத இரத்ததானப் பணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.