யாழ்ப்பாணத்தில் நாளை வெளியாகிறது 'மகாராணி'

எழுத்தாளர் லதா கந்தையா எழுதிய மகாராணி கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை சனிக்கிழமை(11.03.2023) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள YMCA மண்டபத்தில் எழுத்தாளர் யோ.புரட்சி தலைமையில் இடம்பெற உள்ளது.  

நிகழ்வில் கல்வியியலாளர் திருமதி.எஸ்.வி.இந்திரகலா பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.  

மங்கல விளக்கேற்றல், மௌன அஞ்சலி, தேவாரத்துடன் ஆரம்பமாகும் நிகழ்வில் நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தர்மினி ரஜீவன் நூல் மதிப்பீட்டு உரையை ஆற்றுவார். 

இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நூலாசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.

(செ.ரவிசாந்)