நல்லூரில் நாளை நூல் வெளியீடும் நினைவுப் பேருரையும்

 

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ் அறிஞருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கியம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர்.கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரையும் நிகழ்வு நாளை சனிக்கிழமை(11.03.2023) காலை-09.30 மணி முதல் கோவில் வீதி, நல்லூரில் இயங்கி வரும் அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் நடைபெற உள்ளது.

கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ஆன்மீகச் சுடர் ரிஷி.தொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற உள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி உரை ஆற்றுவார். திருக்கேதீச்சர இலக்கிய நூலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் வெளியிட்டு வைக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.அ.சண்முகதாஸ் தம்பதிகள் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வர்.

நிகழ்வில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்கள நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி ச.சர்வராஜா கலந்து கொண்டு "யாழ்.நீர் வழங்கல் மீதான ஆபத்துக்களும் வாய்ப்புக்களும்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் நிறைவு உரை நிகழ்த்துவார்.  

(செ.ரவிசாந்)