நல்லூரில் நாளை இரத்ததான முகாம் நிகழ்வு
ஈழத்துச் சீரடியான் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(12.03.2023) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை நல்லூரில் அமைந்துள்ள ஈழத்துச் சீரடி சாய் மந்திர் ஆலயத்தில் நடைபெற உள்ளது.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0767641919 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.