உரும்பிராயில் நாளை மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு

 

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு, உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையம், மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர் கழகம் ஆகியன இணைந்து ஒன்பதாவது ஆண்டாக நடாத்தும் வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(12.03.2023) காலை-09.00 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறும்.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கும் அனைவருக்கும் பயனுள்ள மரக்கன்றும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.  

எனவே, இந்த உயிர் காக்கும் உன்னதமான இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0773162713,0743675243 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.