மல்லாகத்தில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கெளரவிப்பு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் வடக்குத் தொகுதியினரின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) இடம்பெறவுள்ளது. 

இன்று முற்பகல்-11 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மல்லாகம் காரியாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாவீரர்களின் கல்லறை முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள் மல்லாகத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அஞ்சலி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வும் நடைபெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.