அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 62 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் இன்று ஞாயிற்றுக்கிழமை(23.11.2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் தலைவர் சைவசித்தாந்த பண்டிதர்.கார்த்திகேசு கமலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடச் சமஸ்கிருதத்துறைத் தலைவர் பேராசிரியர்.சிவஸ்ரீ.ம.பாலகைலாசநாதக் குருக்கள் பிரதம விருந்தினராகவும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், சித்த மருத்துவர் நா .கணேசலிங்கநாதன், சுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் ஆலயத்தின் தர்மகர்த்தா க.மணிவண்ணன் ஐயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பெளராணிகர்களான க.இராசையா, வே.இரகுநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

