அச்சுவேலியில் மீண்டும் அதிகூடிய மழைவீழ்ச்சி!

கடந்த செவ்வாய்க்கிழமை (18.11.2025) காலை-08.30 மணி தொடக்கம் புதன்கிழமை (19.11.2025) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி அச்சுவேலியில் பதிவாகியுள்ளது. அந்த வகையில் இக் காலப் பகுதியில் அச்சுவேலியில் 58.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை, இந்தமாதம்-15 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08.30 மணி தொடக்கம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் இலங்கையிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சியாக யாழ் அச்சுவேலியில் 61.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.