வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நடாத்தும் இயற்கையை நேசிக்கக் கற்றுத் தரும் தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானிப் போட்டி நிகழ்வு நாளை புதன்கிழமை (26.11.2025) மாலை-03 மணியளவில் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி நிகழ்வில் பால், வயது வேறுபாடின்றி எவரும் பங்கேற்க முடியுமெனவும், வெற்றியாளர்களுக்குச் சான்றிதழுடன் பரிசில்களும் வழங்கப்படுமெனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

