இளஞ்சைவப்புலவர், சைவப்புலவர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கோரிக்கை

இளஞ் சைவப்புலவர், சைவப்புலவர் தேர்வு-2026 இற்குரிய விண்ணப்பங்கள் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தால் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி அடுத்த மாதம்-23 ஆம் திகதி ஆகும். விண்ணப்பங்களைச் சைவப்புலவர் சி.கா.கமலநாதன், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர், மாசேரி, வரணி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.

விண்ணப்பப் படிவங்களைப் பெற விரும்புவர்கள் 0777197067, 0779773538, 0776132176 மற்றும் 0771350850 ஆகிய வட்ஸ் அப் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற முடியுமெனவும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.