யாழ்.மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 122.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி நயினாதீவில் பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களச் சிரேஷ்ட உத்தியோத்தர் த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) காலை-08.30 மணி முதல் நேற்றுத் திங்கட்கிழமை (26.10.2026) காலை-08.30 மணி வரையான 24 மணி நேரத்திலேயே நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


