பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு!

செஃப் தாமு என்று அழைக்கப்படும் இந்தியாவின் பிரபல சமையல் கலைஞர். கோதண்டராமன் தாமோதரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தனது 72 ஆவது வயதில் காலமானார். 

இந்தியா முழுக்கப் பல்வேறு ஸ்டார் ஹோட்டல்களில் பணியாற்றியுள்ள இவர் உலகின் பல வகையான உணவுகளையும் சமைத்து அசத்தியுள்ளார். 

2010 ஆம் ஆண்டில் தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைச் சமைத்துக் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில் நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் இவரைச் சாரும். சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைக் கெளரவிக்கும் முகமாக இந்திய மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கெளரவித்தது.